நிலவன் இன்றைய தினசரி செய்திகள், தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

 நாள்:- 13.03.2025 (வியாழக்கிழமை)

👉.மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. கடற்கரையில் பொதுமக்கள் ஏராளமாக குவிந்தனர். 

👉.மாசி மகத்தையொட்டி தர்ப்பணம் கொடுத்த போது வேப்பூர் மணிமுக்தாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 20 பெண்களை போலீசார் மீட்டனர். 

👉.விருத்தாச்சலம் அருகே சிறுவம்பார் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த கொடுத்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

👉.கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மாசி மகத்தையொட்டி நாளை வெள்ளிக்கிழமை சுவாமி தேவனாம்பட்டினம் வருவதால் கோவில் மூடப்படும் பின் இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.

👉.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள மணிமுக்தாற்றில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

👉.கடலூர் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயத்தில் மார்ச் 31-ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

👉.காட்டுமன்னார்கோவில் உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் மின் கம்பத்தில் பணியாற்றிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

👉.குள்ளஞ்சாவடி அடுத்து அம்பலவாணன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் கடலில் குளித்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

👉.மாசி மகத்தையொட்டி சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

👉.பெண்ணாடம் சோழன் நகர் பகுதியில் சுற்றித்திரியும் சுமார் 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து 4 பேர் படுகாயமடைந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள். 

👉.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளத்தை சேர்ந்த என்ஜினியர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

👉.மங்கலம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த 4 கவுன்சிலர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

👉‌.தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

👉.கடலூரில் அரசியல் கட்சியினர் , பொது நல அமைப்பினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று கூடி எம்.புதூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதை கண்டித்து 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் என முடிவு செய்தனர்

👉.கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து அரங்கில் மாவட்ட கூடைப்பந்து அணிகளுக்கு வீரர் , வீராங்கனை தேர்வு வருகிற 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

👉.திட்டக்குடியில் 682 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

👉.கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையினால் நேற்று அதிகபட்சம் கொத்தவாச்சேரியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது.

👉.கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த நல்லவாடு கடற்கரையில் மாசி மகத் திருவிழாவையொட்டி நல்லவாடு கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

👉 புதுப்பேட்டை அருகே உள்ள மனம் தவிழ்ந்த புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கைக்காண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!