கடலூர் அருகே விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!


சிதம்பரத்திலிருந்து‌ சென்னை நோக்கி சென்ற டேங்கர் லாரி சுத்துகுளம் என்ற இடத்தில் (தேசிய நெடுஞ்சாலையில்) தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் உடன் சென்ற இருவர் என மூவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இவர்கள் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று இரவு தீ பற்றி எரிந்த சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் 

கண்‌காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று காலை மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு டேங்கர் லாரியினை அப்புறப்படுத்தவும், சாலை போக்குவரத்தை சரிசெய்ய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!