கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
நாள்:- 28.03.2025 (வெள்ளிக்கிழமை)
👉.கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்குகிறது 10-ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு இத்தேர்வை 32,954 மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
👉.பெரியார் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முன் பேருந்து இயக்கியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனால் ஓட்டுனர் பணி நீக்கம்.
👉.பண்ருட்டி களத்து மேடு ஏரி புறம்போக்கில் உள்ள மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு பாம்புடன் வந்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
👉.பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் யாகசாலை பூஜையில் இருந்து வெளியேறிய புகையால் மரத்திலிருந்து தேனி (கதண்டு) கடித்து 30 பேர் காயம்.
👉.கடலூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவிட செய்து வழங்க கோரி குடியேறும் போராட்டம் நடத்தினர்.
👉.நெய்வேலி வடக்கு மேலூர் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை கொலை மிரட்டல் கொடுத்ததால் போலீசார் கைது செய்தனர்.
👉.கடலூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு மகளீர் அமைப்பினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
👉.சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் இருந்த இரு சக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.6 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
👉.பெண்ணாடம் சுமைதாங்கி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
👉.கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை குழும நிறுவனர் இயக்குனருமான மூத்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று 4 மணி அளவில் உயிரிழந்தார்.
👉.நெய்வேலி அருகே பங்கு சந்தையில் ரூ.1 கோடி இழந்ததால் இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
👉.புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட்டு கடலூர் மாநகர மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
👉.விருத்தாச்சலத்தில் உறவினர் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளை கடத்திச் சென்ற சிறுவனை போலீசார் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
👉. மத்திய CISF படை 56-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக "கிரேட் இந்தியன் கோஸ்டல் சைக்கோலத்தான்" என்னும் தலைப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
👉.திருவந்திபுரம் அடுத்த பில்லாடித் தொட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி கடலூர் வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததால் கைது.
👉.சிதம்பரம் அருகே முதியவரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👉.கடலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு, தனியார் நிறுவனங்களில் 1177 புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
👉.விருத்தாச்சலம் அருகே இரயில் சிக்னல் கோளாறு காரணமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் தாமதமானதால் பொதுமக்கள் அவதி.
👉.நெய்வேலி அருகே சொரத்தூரைச் சேர்ந்த நபர் என்ஜினியரை கத்தியால் தாக்கியதால் போலீசார் துரத்தும் போது கீழே விழுந்து கை கால் எலும்பு முறிந்தது.
👉.நெய்வேலியில் உதவி-ஆய்வாளரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தப்பி ஓட முயன்ற இரண்டு ரவுடிகள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கைகளில் முறிவு ஏற்பட்டது.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக