நிலவன்தினசரி செய்தி நாளிதழில் இருந்து!

 நாள்:- 20.03.2025 (வியாழக்கிழமை)

👉.பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதியை சி.பி. சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்

👉.விழுப்புரம் தொல்லாமூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் கடலூர் கே.என்.பேட்டை அருகே லாரியில் தூங்கிய போது மர்ம நபர்கள் அவர்கள் செல்போன் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

👉.திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி, கம்மியம்பேட்டை தேவாலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

👉.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு கடலூரில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது.

👉.கடலூர் மாவட்ட சுனாமி குடியிருப்பில் வசிக்கும் 336 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

👉.கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல் திறன் சோதனை அடுத்த மாதம் ஏப்ரல் துவங்க கல்வித்துறை ஏற்பாடு.

👉.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉.அண்ணா விளையாட்டு மைதானத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 5 இடங்களில் கழிவறை கட்டும் பணிக்கு ரூ.1 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

👉.கடலூர் தாலுகா பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்

👉.தேவனாம்பட்டினம் பகுதியில் ஆதிதிராவிட நல மாணவர்கள் விடுதி கட்டுமானப் பணியை பார்வையிட ஆட்சியர் சென்ற பொழுது கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு கிடந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

👉.சிதம்பரத்தில் வீட்டு மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். 

👉.ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப் பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.2¾ லட்சம் பணம், நகை திருடிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

👉.கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

👉.கடலூர் அருகே மருதாடு-பண்ருட்டி செல்லும் கஷ்டம்ஸ் சாலை வெள்ளத்தால் உள்வாங்கியது. விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.

👉.மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3-வது புத்தகத் திருவிழா சனிக்கிழமை துவங்குகிறது. 101 அரங்குகளுடன் புத்தகத் திருவிழாவை அமைச்சர், ஆட்சியர் துவங்கி வைக்கிறார்கள்.

👉.தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். இதை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். 

👉.கடலூர் மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

👉.காடாம்புலியூர் அருகே கீழிருப்பு கிராமத்தில் ஆடுகளை திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பி ஓடிய நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

👉.காட்டுமன்னார்கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தை சேர்ந்த நபர் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது 2 முதலைகள் கடித்ததில் அந்நபர் முட்டம் அரசு ஆரம்ப மருத்துவமனையில் அனுமதி.

👉.கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கைதிகள். 

👉.திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர்  பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

👉. புதுப்பேட்டை அருகே அக்கடவல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த  பெண் உட்பட இரண்டு பேர் கைது.

என்றும் மக்கள் பணியில் நிலவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!