கடலூர் மீனவ இளைஞர்கள் கடலோர காவல்படையில் சேர்வதற்கான இலவச பயிற்சி முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்காக கடலூர். இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மையங்களில் 4-வது 3 மாத கால இலவச பயிற்சி 16.12.24 தேதி முதல் வகுப்புகளை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட அலுவலகம் கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அரசு பணிகளில் சேர்வதற்கு வழங்கப்பட்ட அடிப்படை பயிற்சி ஆகும் .
பயிற்சி பெற்ற இளைஞர்கள் மேலும் திறன்களை வளர்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பணியில் சேர்வதற்கு விடாமுயற்சி, கடின உழைப்புடன், வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்து, குறிக்கோளை மட்டுமே மனதில் நிறுத்தி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக