கடலூர் மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்களுக்கான சமத்துவம் குறித்து கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட நீதித்துறை சார்பில் சமத்துவம், பெண்களின் மேம்பாடு மற்றும் பெண்களுக்கான அதிகாரம் குறித்து  கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள்  பேசுகையில் நகரங்களில் பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு , சமக்கல்வி கிடைக்கிறது அதேபோன்று கிராமப்புற பெண்களுக்கும் எப்பொழுது கிடைக்கிறதோ அப்போதுதான் பெண் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாறும் இன்று சோசியல் மீடியாக்களின் தாக்கங்கள் அதிகமாக பரவி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது கிராமப்புற மக்களிடையே சென்றடைய  மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களை பாதுகாப்பதே நம் தலையாய கடமை என  பேசினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!