கடலூர் அருகே சி.முட்லூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் C.முட்லூர் தனியார் மண்டபத்தில் கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகையில் ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் சமூகம் விளங்க வேண்டும் தற்போது மாணவர்கள் சோசியல் மீடியாவை கையாளுவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணம் செல்போன்தான். அதை மிகவும் கவனமான முறையில் கையாள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில் C.முட்லூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அர்ஜுனன், கல்லூரி பேராசிரியர் அறிவழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர். நல்லதுதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள். லாமேக், ராமதாஸ், காவல் ஆய்வாளர். அம்பேத்கர்,கவிதா உதவி ஆய்வாளர்கள். மகேஷ், ஆறுமுகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக