மாநில அளவிலான செஸ் போட்டி பண்ருட்டி பள்ளியில் நாளை தொடக்கம்!


பண்ருட்டி தமிழ்நாடு அளவிலான 8வது சதுரங்கப் போட்டி பண்ருட்டி மேலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாளை தொடங்குகிறது.இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விளையாடுகின்றனர். மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் இலக்கியன், இளமாறன், பூபாலன், இசைப்பிரியா, காவியன், பேரனியன், தாமரை, தமிழ்நிலா போன்ற 68 முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் களம் காண உள்ளனர். இப்போட்டி யு8, யு10, யு 12, யு 14, யு 16, யு24 என வயது அடிப்படையில், 6 பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என 2 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கோப்பைகளுடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!