நிலவன்தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

 நாள்:- 17.03.2025 (திங்கள்கிழ👉.ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

👉.கடலூர் மாநகராட்சி பகுதியில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாயில் சிமெண்ட் சிலாப் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

👉.கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 22 பேருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல். 

👉.வடலூர் அருகே உள்ள கருங்குழி சிவன் கோவில் தெரு பகுதியில் குடும்பத்தகராறு மனம் உடைந்த என்ஜினீயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

👉.பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் ஆன போலீஸ் ரோந்து பணியின் போது பொது இடத்தில் மது அருந்திய நபரை கைது செய்தனர். 

👉.பண்ருட்டி அருகே கண்டாரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் 17 வயது சிறுமியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டியதால் கைது செய்யப்பட்டார். 

👉.கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்த நபர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த கூறி கொடுமைப்படுத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

👉.மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூராக ஊர்வலம் சென்ற 350 பேர் மீது வழக்கு.

👉.கடலூர் பிரைன் ஜிம் தமிழ்நாடு அகாடமி சார்பில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்க விழா நடைபெற்றது. இதில் சாதனை படைத்த மேயருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

👉.புதுச்சேரியில் இருந்து ஆல்பேட்டை சோதனை சாவடி வழியாக கடலூருக்கு மதுபானம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு.

👉.புவனகிரி காவல் உதவி-ஆய்வாளர் ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

👉.வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுப் பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

👉.சிதம்பரம் 4 மாத வீதிகளிலும் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

👉.பெண்ணாடம் கிழக்கு சாலை சந்திப்பில் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. 

👉.வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் இங்கு பேருந்து நிறுத்தம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை. 

👉.வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி திருமாணிக்குழி செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை மோசமான நிலையில் உள்ளது. 

👉.கடலூர் அருகே நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தல்.

👉.விருத்தாச்சலம் பாலக்கரையில் உள்ள தெப்பக்குளத்தில் நண்பருடன் குளித்த பொழுது என்ஜினியர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

👉.கடலூர் செல்லங்குப்பம் ஜெயராம் நகரில் உள்ள சி.கே என்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

👉.குள்ளஞ்சாவடி அருகே உள்ள வெங்கடம்மாளபுரம் பகுதியைச் சேர்ந்த இளநீர் கடை வியாபாரி அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

👉.சாமியார்ப்பேட்டை கடற்கரையில் கடந்த 1 மாதத்தில் 100-ம் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாகவும்,ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை. 

என்றும் மக்கள் பணியில் நிலவின் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!