தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் கைத்தறித்துறை மானிய கோரிக்கை குறித்து பேசிய ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர். தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று (28.03.2025) நடைபெற்ற வனத்துறை மற்றும் கைத்தறித்துறை மானிய கோரிக்கையில், வனத்துறை மற்றும் நெசவாளர்களின் நலன் காக்கு கோரிக்கைகளை இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் பேசினார், வனத்துறை சார்பாக பேசிய கோரிக்கைகளின் விபரம்
1. வனப்பகுதிகளில் பாலம் உள்பட பொதுமக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறை எளிமையாக்கவும்
2. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆடு,மாடுகள் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டியும்,
3. விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தினால் வழங்கப்படும் சதவீதத்தை உயர்த்த வேண்டியும்,
4. வனத்துறை அதிகாரிகளுக்கு குடியிருப்பு கட்டிடங்கள் அமைக்க வேண்டியும்,
5. இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் இகோ-டூரிசம் அமைக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கைத்தறித்துறை மானியக்கோரிக்கைகளில் பேசிய MLA அவர்கள்
1. நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டியும்,
2. ஜனதா ரக சேலை வழங்க வேண்டியும்,
3. நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டியும்,
4. நெசவாளர்களுக்கு தனியாக காப்பீடு அட்டை வழங்க வேண்டியும், நெசவாளர்களுக்கென தறியுடன் கூடிய இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியும்,
5. சேலை வேட்டி மற்றும் காடா போன்றவைகளை உற்பத்தி செய்ய மாறி மாறி வழங்காமல் சேலைகளை விருதுநகர் மாவட்டத்திற்கும், வேட்டிகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் காடா-வை ஈரோடு மாவட்டத்திற்கும் நிரந்தரமாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சி திட்டப்பணிகளான
1. அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்
2. சங்கரன்கோவில் முக்கு முதல் முதுகுடி நான்கு வழிச்சாலை வரை உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்
3. இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்
4. அய்யனார் கோவில் சாஸ்தா கோவில் மற்றும் சஞ்சீவி மலைப்பகுதிகளை சுற்றுலா தளமாக தரம் உயர்த்த வேண்டுமென MLA அவர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். இந்நிகழ்வின் சிறப்பு என்றால் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு நாம் கோரிக்கை வைப்பதற்கு முன்பே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்கள் நெசவாளர்களுக்கான கூலி உயர்வை மாபெரும் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இச்சிறப்பான அறிவிப்பை அறிவித்து நெசவாளர்களின் நலன்காத்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் கைத்தறித்துறை அமைச்சர் அவர்களும் இராஜபாளையம் தொகுதி நெசவாளர் பெருமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக MLA அவர்கள் கூறினார்.
குறிப்பு: இதன் காணொளி காட்சி நாளை நிலவன் TV யூடியூப் சேனலில் காணவும்


கருத்துகள்
கருத்துரையிடுக