கடலூர் மாவட்ட செய்திகள்!

 நாள்:- 11.03.2025 (செவ்வாய்க்கிழமை)

 நிலவன்  இன்றைய தினசரி செய்திகள்..

📰தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

🍏.கடலூர் நத்தப்பட்டு கஷ்டம் சாலையில் உள்ள விஸ்வ மகாதேவ் மருத்துவ மையத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

🍏.விருத்தாச்சலம் அருகே கோ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் உளுந்தூர்பேட்டை காட்டு நெமிலி தனியார் பள்ளியில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மின் வயர்களை திருடியதால் கைது.

🍏.நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க எம்.பி களை அநாகரிகமானவர்கள் என மத்திய மந்திரி கூறியதால் கடலூரில் மத்திய கல்வி மந்திரியின் உருவ பொம்மை எரித்து தி.மு.க.வினர் கண்டனம்.

🍏.கடலூரில் அனேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

🍏.பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் 8052 பறவைகள் உள்ளதாக மண்டல மேலாளர் தகவல்.

🍏.சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 64 பேரை போலீசார் கைது செய்தனர்.

🍏.கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற விசைப்படகு ஒன்றுக்கு 10 மாதங்களுக்கு 19 ஆயிரம் லிட்டர் டீசல் மானியத்தில் வழங்கப்படுவதாக மின்வளத்துறை தகவல்

🍏.சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி குளோபல் சிறப்பு விருதுகள் வழங்க விழா கடலூர் கே.என்.சி கல்லூரியில் நடைபெற்றது.

🍏.குறிஞ்சிப்பாடி அருகே கார் வாங்க கணவர் நகை கேட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். மாமனார் மாமியார் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு. 

🍏.முதலமைச்சரின் தமிழ்நாடு அரசின் சார்பில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் அடிப்படையில் கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 500 மரக்கன்றுகளை நடும் பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

🍏.குறிஞ்சிப்பாடி அருகே கு.நெல்விக்குப்பம் பிள்ளை தெருவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை அறிவாளால் வெட்டிய குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த 3 நபர் கைது.

🍏.பண்ருட்டி அருகே திருவதிகை மாரியம்மன் கோவில் தெருவில் டிப் டாப்பாக உடை அணிந்து முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த ஆசாமி.

🍏.பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி என்பவர் காவலர்கள் குடியிருப்பில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

🍏.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தை தடுக்க பரிசோதித்து உள்ளே அனுமதித்தனர்.

🍏.கடலூர் கேப்பர் மலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை நேற்று அகற்றினர். 

🍏.நான் பெண் என்பதால் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்களா ?என அதிகாரிகளிடம் கடலூர் மேயர் கேள்வி எழுப்பினார்.

🍏.கடலூர் அருகே தீர்த்தனைகிரியில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் ஆட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்தனர்.

🍏.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் நாளை மகாமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 

🍏.காட்டுமன்னார்கோவில் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

🍏.திட்டக்குடி பிரதான சாலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் கழிவு நீர் கால்வாயால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

🍏.உளுந்தூர்பேட்டை அருகே விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி மருத்துவ பணியாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!