தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். பாசறை ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு எஸ். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். 

இந்நிகழ்வில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடம் இனிய தமிழில் பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள். ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் கழக செயலாளர். இளங்கோவன், மாவட்ட மகளிர் அணிஅமைப்பாளர். சுமதி ராமமூர்த்தி, துணை சேர்மன். கல்பனா குழந்தைவேலு, கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் குழந்தை செல்வங்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!