கடலூர் 25-வது அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற கடலூர் மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர். வினோத்குமார்!


கடலூர் மாவட்டம் 25வது அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் கடந்த மார்ச் 18.03.2025 முதல் 21.03.2025 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தமிழக காவல்துறை துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் கடலூர் ஆயுதப்படை தலைமை காவலர் V. வினோத்குமார் அவர்கள் பங்கேற்று கார்பன் துப்பாக்கி  50 கெஜம் தூரம் பிரிவில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். ஊ.மங்கலம் முதல்நிலை காவலர். அன்பரசன் அவர்கள் இன்சாஸ் பிரிவில் பங்கேற்றார். 

25வது அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழக காவல்துறை அணி வென்றது. துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வினோத்குமார் அவர்களை வடக்கு மண்டல காவல்துறை தலைவர். அஸ்ரா கார்க் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விழுப்புரம் சரகம் துணைத தலைவர். திஷா மிட்டல் IPS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!