கோவை ESI மருத்துவமனை முன்பு CPI(M) மாவட்ட குழு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

கோவையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாஸ்மாக் சங்க நிர்வாகியின் 19 வயது மகள் அனு கீர்த்தனா தற்கொலை 21 ஆம் தேதி நீட் மறு பெயர் நடைபெற உள்ள நிலையில் வீட்டில் இருந்த வலி நிவாரணி மருந்து குடித்து தற்கொலை ஏற்கனவே நீட் தேர்வில் பயிற்சி பெற்று BDS கிடைத்திருந்த நிலையில் MBBS படிப்பதற்காக மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டு வரும் 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.அந்தத் தேர்வுக்கு மாணவி தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக நள்ளிரவு வலி நிவாரணி மருந்து குடித்து உயிரிழப்பு மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் கோவை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம நடைபெற்று வருகின்றது.

 ESI மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வருகின்றனர் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு உள்ளனர் ESI மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு   பலப்படுத்தப்பட்டுள்ளது சுமார் 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ESI மருத்துவமனை வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் உயிரிழந்த மாணவியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு முழக்கங்கள் CPIM கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் மாவட்ட குழுக்கள் ஆர்ப்பாட்டம் மத்திய கல்வி அமைச்சரை கண்டித்தும் முழக்கங்கள்

உடலை வாங்க மாட்டோம் என முழக்கம்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்