8 அடி பின்னோக்கி வருவது 40 அடி தாண்டுவதற்கு சமம்: சீமான்!!
திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு பெறுவது, தவெகவிடம் ஒரு எம்பி சீட்டை பெறுவது; அதற்கு எதற்கு ஒரு கட்சியை (காங்கிரஸ்) வைத்துள்ளீர்கள்? மாணிக்கம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கூட்டணியில் நின்று வெற்றிபெற முடியுமா? தனியாக நின்று டெபாசிட் கூட பெற முடியாது.நாம் நிறைய தோற்று போயிருக்கிறோம் உலக வரலாற்றில் இவ்வளவு தோல்விகளை சந்தித்த இயக்கம் வேறு இல்லை, இருக்கபோவதும் இல்லை.
எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராமல் நிற்போம். எதற்காக நாங்கள் வெல்ல கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்காகவே நாங்கள் வென்றே தீருவோம்; எங்களது வெற்றி சற்று தள்ளிப் போகலாம், ஆனால் நிச்சயம் வந்தே தீரும்.
தேர்தல் வெற்றி தோல்விக்கு நான் அப்பாற்பட்டவன்; நமக்கு இருப்பது தற்காலிக பின்னடைவுதான்; 8 அடி பின்னோக்கி வருவது 40 அடி தாண்டுவதற்கு சமம் ஒவ்வொரு தோல்வியும் அதற்கான வெற்றியை தயாரித்துக் கொண்டே இருக்கிறது; இனிமேல் நாம் பேச மாட்டோம்; நம்மை பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக