விசாரத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி யின் 56 வது பிறந்தநாள் விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மேல்விஷாரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிஸ்கட் இனிப்பு ஆகியவை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் M.அப்துல் ஷூக்கூர் தலைமை வகித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் K. O.நிஷாத் அஹமத் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் G. விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்டத் தலைவர் C.பஞ்சாட்சரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தமிழக வெற்றிக் கழக மேற்கு நகர செயலாளர் I.அஸ்கர் அலி கிழக்கு நகர செயலாளர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த விழாவில் மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் B M முஜஸ்ஸர் அகமத் BSc , நகரப் பொருளாளர் சுஹேல்,சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரஃபீக், மாவட்டச் செயலாளர் பைசல் அகமத், சுரேஷ்குமார்,
நகரச் செயலாளர் அழகேசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாரிஸ், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஐ என் டி யூ சி தலைவர் சதாம் உசேன், லியாகத் அலி, நிர்வாகிகள் பயாஸ் அகமத், ஹாசிம் மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக