வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 50ஆவது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஐம்பதாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது 2022 - 25 ஆண்டு இளநிலை மற்றும்  2023-25 முதுநிலை பட்டங்கள் முடித்த 1096 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

குறிப்பாக இளநிலையில் உட்பட்ட 14 பாட பிரிவுகளில் பட்டம் முடித்த 945 மாணவிகளுக்கும் மற்றும் முதுநிலையில் 11 பாடப் பிரிவுகளில் பட்டம் முடித்த 151 மாணவிகள் என மொத்தமாக 1096 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இளநிலை மற்றும் முதுநிலையில் மொத்தம் 40 கல்லூரி மாணவிகள் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்