ராணிப்பேட்டையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி ஆண்டு 1435 கான ஜனபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர். பிரியா IAS !!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி  ஆண்டு 1435 கான ஜனபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர். பிரியா  IAS அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று மனுவின் மீது விசாரணை செய்து அதற்கான தீர்வினை காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஜமபந்தி சனி ஞாயிறு திங்கள் தவிர்த்து 25 ஆம் தேதி வரை ஆற்காடு திமிரி புதுப்பாடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்று அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக கிராம கணக்கு தணிக்கை கிராம நிர்வாக அலுவலர் (VAO) பராமரிக்கும் நில ஆவணங்கள், அடங்கல், சிட்டா போன்ற கிராமக் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்

 மேலும் பொதுமக்கள் தங்கள் நிலப் பிரச்னைகள் (பட்டா மாறுபாடு, உட்பிரிவு, எல்லைப் பிரச்னை) தொடர்பான மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் வழங்கினர் 

மேலும் அரசு நலத்திட்டங்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், விதவைகள் போன்றோர் அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது இதர உதவிகளைப் பெறவும் ஜமாபந்தியில் விண்ணப்பிக்கலாம்; வழங்கியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்