சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பால் டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இருசக்கர வாகனம் 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா பேட்டை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள பெல்லியப்பா நகர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி முன்னாள் சென்று இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த அனந்தலை பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் கீழ் விசாரணை பகுதி சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் டேங்கர் லாரியில் சிக்கிய இருசக்கர வாகனம் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் டேங்கில் உராய்வு ஏற்பட்டதால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எறிய தொடங்கியது
இதனை கண்ட பொதுமக்கள் வாலாஜா காவல் நிலையம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பளத்திற்கு வரவழைத்து இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து சாலையில் இருந்த விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் காயமடைந்த இரண்டு நபர்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக