புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் சார்பில் UDR பட்டா சிஸ்டத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர். கஜேந்திரன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் UDR பட்டா சிஸ்டத்தை கேன்சல் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியதாவது: வருவாய்த் துறையினர் 1977 ஆம் ஆண்டு முதல்  யூ டி ஆர்   மூலம் பட்டா வழங்குவதாக கூறி யாருடைய மூல ஆவணங்களையும் பரிசீலனை செய்யாமல் ஏழை எளிய நலிந்தோர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நிலம் மற்றும் வீட்டுமனைகளை  

யூ டி ஆர்  மூலம் பட்டா வழங்குவதாக தெரிவித்து ஒருவருக்கொருவர் நிலங்களையும் வீட்டு மனைகளையும் ஒன்று சேர்த்து அவரவர் விருப்பம் போல்  

யூ டி ஆர் மூலம் பட்டா வழங்கியுள்ளதால், இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத அளவிற்கு

 யூ டி ஆர் பட்டா அமைத்துள்ளனர்.  

யூ டி ஆரினால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை திருத்தம் செய்து

 யூ டி ஆர்  பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர் நடராஜ்.

கருத்துகள்