அன்னை தெரேசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை சார்பில் அரக்கோணம் ரயில்வே RPF விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இலவச கராத்தே மற்றும் சிலம்பும் பயிற்சி துவக்கம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,அன்னை தெரேசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை சார்பில்  அரக்கோணம் ரயில்வே RPF விளையாட்டு மைதானத்தில் இலவச கராத்தே மற்றும் சிலம்பும் பயிற்சி  துவங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் டாக்டர். ராஜ்குமார் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரயில்வே காவல் உதவி ஆய்வாளர். ஆனந்தன் மற்றும் கைனுர்  ஊராட்சி மன்ற தலைவி சமூக சேவகி உமா மகேஸ்வரி மற்றும் மாநில பொறுப்பாளர்கள்.  சனோலியன்,  சகாயராஜ், சுரேஷ், திவின், நவீன், சூர்யா, பி. டி. ராஜன் சாம்சங் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள். கௌதம், உதயா, சிவன், அஜய், பிரவீன், மணிமாறன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கராத்தே  நிகழ்வினை நடத்திக் காட்டிய மாஸ்டர். சாலமோன் அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் மாநில பொறுப்பாளர். ராகுல் நன்றினை தெரிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்