பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றுப் பாதையில் நாகர்கோவிலில் இருந்து மும்பை (LTT) செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்!!

நாகர்கோவிலில் இருந்து மும்பை (LTT) செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16352), பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரையிலான குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் வழியாகச் செல்வதற்குப் பதிலாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது. 

அதன்படி, மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்வதற்குப் பதிலாக மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இந்த ரயில் செல்லும் என்பதால், திண்டுக்கல் ரயில் நிலைய நிறுத்தம் தற்காலிகமாகத் தவிர்க்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பாதையில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மே 14, 17, 21, 24, 28, 31 மற்றும் ஜூன் 04, 07 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் பகுதியில் இருந்து பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகள், இந்த வழித்தட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்