பாசாரில் வெறிச்சோடிக்காணப்பட்ட திடிர் திருவிழா சாலையில் மண்கொட்டி கிராம முக்கியஸ்தர் அராஜகம்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம முக்கியஸ்தர் என சொல்லிக்கொண்டு அலையும் பெரியசாமி தலைமையில் மாரியம்மன் கோயில் திடிர் திருவிழா தொடங்கப்பட்டது.
பழைய மாரியம்மன் கோயில் தெருவில் நாங்கள் முக்கியஸ்தர்கள் என்ன வேனாலும் செய்வோம் என சொல்லிக்கொண்டு அப்பகுதி மக்களிடம் எதுவும் தெரிவிக்காமல் ஜேசிபி இயந்திரத்தைக்கொண்டுவந்து தெருவை சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டு தெருவையும் வீட்டுவாசல்களையும் சேதப்படுத்தி அராஜகம் செய்தனர்.
அதில் ஒரு முக்கியஸ்தர் என்னும் போர்வையில் வலம் வருபவர் நாங்கள் ஊரில் பேசி முடிவெடுத்துவிட்டோம் நாங்கள் சொல்வதுதான் செய்வதுதான் சட்டம் என மதுஅருந்திவிட்டு கூறினார்.பின் அதேப்பகுதியிலுள்ள சிமெண்ட் சாலையில் யாருக்கும் தெரிவிக்காமல் பெராச்சி மண் கொட்டினர் அதில் தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு சிரமப்பட்டனர்.
பின்னர் 18.5.2026 அன்று சாமிக்கு தேர்த்திருவிழா நடைப்பெற்றது அதில் தேர் பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வரும்போது அந்த சேரில் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஜேசிபியை வைத்து தள்ளினார்கள் இதனால் முற்றிலும் அப்பகுதி சேரும் சகதியுமாக காணப்பட்டது.
திடிர் தேர்த்திருவிழா போட்டதால் தேரை இழுப்பதற்கு கூட மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்காணப்பட்டது வருடாவருடம் நடக்கும் விழாபோல் இல்லாமல் இந்தாண்டு ஏதோ பேருக்காக திருவிழா நடைப்பெற்றது என்று சொல்லிக்கொள்ளலாம் அந்த அளவிற்கு இந்தாண்டு நடைப்பெற்றது இவ்விழா.
டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தைவிட இந்த ஊரில் கிராம முக்கியஸ்தர்கள் என்பவர்கள் எழுதும் எடுக்கும் முடிவுகள்தான் சட்டமாக உள்ளது இப்படி அராஜகம் செய்வதற்காக இவர் இப்படி செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்றைக்கு மாறுமோ இந்நிலை என பலரும் புலம்புகிறார்கள்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக