பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தல வரலாறு!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடைவரைக் கோயிலே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும் இங்கு விநாயகர் ஆறு அடி உயர உருவமாக இரண்டு கைகளுடன் வலம்புரி விநாயகராக காட்சியளிக்கிறார் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் மூலவர் கற்பக விநாயகர் ஆவார் கிமு நான்காம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் குன்றை குடைந்து அமைக்கப்பட்டது பிள்ளையாரின் பெயரால் பிள்ளையார்பட்டி என இவ்வூர் அழைக்கப்படுகிறது இரண்டு கைகளுடன் இருப்பதால் தும்பிக்கை வலது புறமாக வளைந்து இருப்பதால் சிறப்புடைய பிள்ளையாராக கருதப்படுகிறது வலம்புரி பிள்ளையார் என அழைக்கப்படுகிறது திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள இத்தளத்தில் ஸ்ரீ திருவிசர் மருதீஸ்வரர் செஞ்சடேஸ்வர் போன்ற லிங்கங்களும் அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கிமு 500 முதல் கிபி 1284 வரையிலான 14 கல்வெட்டுகள் இத்தளத்தில் காணப்படுகிறது இக்கல்வெட்டில் பிள்ளையார்பட்டியின் பெயர்கள் எக்காட்டூர் திருவீங்கைகுடி மருதங்குடி ராசநாராயணபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது கிபி 1284 முதல் இக்கோவில் நகரத்தார்கள் உரிமை ஆயிற்று இரண்டு கைகளுடன் பிள்ளையார் காட்சியளிப்பது இங்கு மட்டும்தான் மற்றொரு பிள்ளையார் சிலை ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ளது இச் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி தன் பெயரை கல்வெட்டில் செதுக்கியுள்ளார் "எக்காட்டூர் கோன் பரணர் பெருந்தச்சன்" என கிமு நான்காம் நூற்றாண்டு முதல் கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த தமிழ் வரி வடிவ எழுத்தில் அமைந்துள்ளது இவ்வாதாரங்கள் மூலம் உலகின் முதல் பிள்ளையார் வடிவம் இதுதான் என அறியலாம் கையில் மோதகம் இன்றி யோகநிலையில் உலக நன்மைக்காக லிங்கம் வைத்து தியானம் செய்த திருக்கோல த்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது கேட்ட வரம் தரும் சித்தி அளிப்பவராக அருள் பாலிக்கிறார் திருமண பேரு தரும் காத்தாயினி வழிபாடு பிள்ளை பேரு தரும் அதிசயனங்கம் வழிபாடு செல்வ வளம் தரும் பசுபதீஸ்வரர் வழிபாடு போன்றவை இங்கு சிறப்பு வாய்ந்ததாகும் பிள்ளையார் சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது அப்போது பக்தர்கள் உண்ணாமிருந்து கும்பம் வைத்து வழிபட்டு அந்த கும்ப நீரில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வதாக நினைத்து நீராடுவார்கள் இந்த வேண்டுதல் செய்யும் பொழுது நினைத்தது நிறைவேறும் என்பது கண் கண்ட உண்மையாகும்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக