கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் செவிலியர்களுக்கு வழங்கிய சர்வதேச அளவில் உயரிய விருதான ‘டெய்சி’ விருது!!

கோவை ராயல் கேர் மருத்துவமனை  செவிலியர்கள்  சர்வதேச அளவில் உயரிய விருதான ‘டெய்சி’ விருது பெற்று அசத்தல்.

செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி சர்வதேச அளவில் புகழ் பெற்ற விருதாக டெய்சி விருதுகள் வழங்கப்பட்டது.. 

பல்வேறு வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை தேர்வு செய்து  வழங்கப்பட்டு வந்த டெய்சி விருதுகள் இந்தியாவில் முதன் முறையாக கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு  சர்வதேச தரச்சான்றுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக வும், இந்திய  செவிலியர்களை சர்வதேச அளவில்  அங்கீகரிக்கும்  விதமாக    நாட்டில் முதல் முறையாக கோவையில்  செவிலியர்களுக்கான டெய்சி விருது வழங்கும் விழா நடைபெற்றது…

ராயல் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி,மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட  ஆறு செவிலியர்களுக்கு டெய்சி விருதுகள் வழங்கி கவுரவித்தார்..

பல்வேறு மருத்துவ பிரிவுகளில் பணியாற்றும் விருது பெற்ற  செவிலியர்களுக்கு முன்னதாக  வெண்மை மலர் கிரீடம் சூட்டப்பட்டது..

தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டு  கலைஞர்களின்  கையால் வடிவமைக்கப்பட்ட,தி ஹீலிங் டச் எனும் ஒரே கல்லால் ஆன   சிற்பம் மற்றும் செவிலியர்கள் தங்களது சீருடையில் அணியக்கூடிய, சர்வதேச அங்கீகாரத்தின் அடையாளமாக பேட்ஜ் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..

விழாவில் பேசிய,டாக்டர் மாதேஸ்வரன், எங்கள் மருத்துவமனை  செவிலியர் அணியை வலுப்படுத்துவதிலும், அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதிலும் நிர்வாகம்  உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.. 

நோயாளிகளை முழுமையாக குணப்படுத்துவதில் செவிலியர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்த அவர்,

புகழ் பெற்ற டெய்சி விருது பெற்ற செவிலியர்கள் வரும் காலங்களில் ராயல் கேர் மருத்துவமனையின்  வெளிநாட்டு நோயாளிகள் மருத்துவ பிரிவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்..

விழாவில்,செவிலியர் பிரிவின் இயக்குநர் டாக்டர் சியாமளா குமார்,உட்பட ராயல் கேர் மருத்துவமனையின்  மருத்துவ நிபுணர்கள்,அலுவலக நிர்வாகிகள்,செவிலியர்கள்,பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்