கொங்கு மண்டலத்தில் ஆட்டத்தை மாற்றும் தவெக!!...
கோவை மாவட்டம்,கோவை..பவருக்கு வந்த செங்கோட்டையன்.. கொங்கு மண்டலத்தில் ஆட்டத்தை மாற்றும் தவெக ..
கோவை: தவெக நீண்ட இழுபறிக்கு பிறகு ஆட்சியமைத்துவிட்டது. இந்த தேர்தலில் கொங்கு அரசியல் மிகப்பெரியளவுக்கு கவனம் ஈர்த்தது. திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் அங்கு வெற்றி பெற போராடினார்கள். ஆனால் கொங்கு மண்டலத்தில் தவெக அதிக தொகுதிகளை வெற்றி பெற்றது. செங்கோட்டையன் அமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெகவின் கொங்கு மண்டல முகமாக அவர் இருக்க போகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியில் அதிருப்தியில் உள்ள திமுக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்ஜிஆர் காலத்து சீனியர், அதிமுக முன்னாள் அமைச்சர் என்று அதிமுகவின் கொங்கு மண்டல தளபதியாக
இருந்த செங்கோட்டையன் கடந்தாண்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தது. திமுகவும் அங்கு வெற்றி பெற காய் நகர்த்தி வந்தது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக