சபாநாயகர். ஜே.சி.டி. பிரபாகர் கொடுத்த டிரம்ப்கார்டு!!

எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுத்த ஒரு முடிவு, அந்த 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் அரசியல் வாழ்விற்குப் பெரிய உலை வைத்துள்ளது.

சட்டமன்ற விதிகளின்படி, பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தவுடன் சபாநாயகர் மிக எளிதாக #குரல்வாக்கெடுப்பு மூலம் தவெக அரசு வென்றதாக அறிவித்திருக்கலாம்.

ஆனால், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேரடியாக டிவிஷன் முறையைப் பயன்படுத்தினார். இந்த #நேரடிவாக்கெடுப்பு முறையினால், எடப்பாடியின் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாகக் வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும், விவரங்களும் அவைக் குறிப்பில் அதிகாரப்பூர்வ சாட்சியமாகப் பதிவாகிவிட்டன.

எடப்பாடியின் அடுத்த ஆட்டம்: தகுதி நீக்கப் பாய்கிறதா சட்டம்?

தற்போது எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்துள்ள இந்தத் தெளிவான ஆதாரம் (#ConcreteEvidence), அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்படி (#AntiDefectionLaw) தகுதி நீக்கம் செய்யப் போதுமானதாகும். வாக்கெடுப்பு முடிந்த சில மணி நேரங்களிலேயே சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 24 முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கினார். மேலும், கொறடா உத்தரவை மீறிய 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அதிமுக தரப்பு முறைப்படி மனு அளித்துள்ளது.

சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி இந்த வாக்கெடுப்பு ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டப் போராட்டம் நடத்த முழு உரிமையும் பெற்றுள்ளார். தவெக அரசு தற்காலிகமாகத் தப்பித்திருக்கலாம், ஆனால் சபாநாயகர் பிரபாகர் நடத்திய நேரடி வாக்கெடுப்பு முறை, இபிஎஸ் கையில் அதிமுகவை மீண்டும் முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரு 'டிரம்ப் கார்டாக' மாறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்