தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் புதிய இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்!!
1986 ஏப்ரல் 15 அன்று பிறந்த இவர், 2013-ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த (Tamil Nadu Cadre) இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) பட்டம் பெற்றுள்ள இவர், தனது பணிக்காலத்தில் திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், உதவிச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார். தற்போது செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள இவரிடம், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக