தமிழகத்தில் தொடர் கொலைகள்!!
வாயில் வாழைப்பழம் வைத்தது போல மவுனம் காக்கும் பாஜக:
தவெகவின் ‘பி’ டீம் என்பது அம்பலம்:
சென்னை: தமிழகத்தில் தொடர் கொலைகளுக்கு வாயில் வாழைப்பழம் வைத்திருப்பது போல, பாஜ மவுனம் காக்கிறது. இது, தவெகவின் ‘பி’ டீம் குற்றச்சாட்டுக்கு வலு சேர்கிறது என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியதாவது:
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரி இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் செய்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. இவர்கள் சட்ட ஒழுங்கு லட்சணம் இது தானா? அப்படி என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இது குறித்து அவர்கள் எந்த கவனம் செலுத்தியதாக தெரியவில்லை, அவர்கள் ஆட்சியை தக்க வைக்க அவர்கள் கவனம் சென்று கொண்டு உள்ளது.
யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் அவர்கள் கவனம் சென்று கொண்டு உள்ளதே தவிர தமிழக மக்கள் மீதோ, தமிழக மக்களுடைய பிரச்சனைகள் மீதோ எந்த ஒரு அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. சட்ட ஒழுங்கு ஒரு கேள்விக்குறியாகத் தான் இருந்து வருகிறது.அவர்களுக்கு இருக்கக் கூடிய எந்த ஒரு பின்னடைவையும், அவர்கள் செய்வது இணையத்தளப்படை மூலம் நியாயப்படுத்த முடியும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆணவம் தான் இவர்கள் இது குறித்து பேசாமல் உள்ளனர்.பாஜக தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளனர். இது ஏற்கனவே வைத்துக் கொண்டு இருக்கும் குற்றச்சாட்டு தான். ஆர் எஸ் எஸ் பாஜகவின் ‘பி’ டீம் தான் தவெக என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து வைத்து வருகிறோம். அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த மவுனம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக