தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசி பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது!!
கடந்த 2022 பிப்ரவரி மாதமே தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்து துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓட்டுநர்கள் பணியின் போது சட்டை பையில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 2024 டிசம்பர் மாதம், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால், 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, இந்த அறிவிப்பை தவெக அரசு புதிதாக வெளியிட்டுள்ளதாக ஒரு தனியார் டிவி’ தவறாக பரப்புகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக