உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சி!!


தேனி மாவட்டம்,தமிழக முதலமைச்சர்.  C.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.  N.ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் 

தேனி தெற்கு மாவட்ட செயலாளர் Left பாண்டி அவர்களின் அறிவுறுத்தலின்படியும் 

கம்பம் சட்டமன்ற உறுப்பினர். PLA.ஜெகநாத் மிஸ்ரா. MLA அவர்களின் ஆலோசனை படியும் 

உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர். N.ராம்குமார் B.sc அவர்களின் தலைமையில் இன்று பட்டினி தினத்தை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு லட்சுமிநாயக்கன்பட்டி கிளையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தேவாரம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர் தோழிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்