வாடிப்பட்டி:சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா!!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமான அருள்மிகு சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மற்றும் மகா யாக பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. வருகின்ற
26 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதை ஒட்டி லட்சார்ச்சனை தொடங்கியது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய நட்சத்திரங்களை சொல்லி பக்தர்கள் லட்சார்ச்ணையில் வேண்டிக் கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மூன்றாம் நான்காம், ஐந்தாம் கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது திங்கள்கிழமை அன்று லட்சார்ச்சனை
நிறைவு பெரும் செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை மகா சங்கல்பம் மகா யாகம் நடைபெறும் தொடர்ந்து
கடம் புறப்பாடாகி திருமஞ்சனம் மகா அரத்தி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, ஆய்வாளர் சாவித்திரி, தக்கார் மாலதி உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாக நட்சத்திர கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை:
இதேபோல், மதுரை அருகே விசாக நட்சத்திரம் மற்றும் மூன்று கிரகங்கள் இணைந்த சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் ஆலயத்தில் குருப் பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் இம்மாதம் 26..ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.15..மணிக்கு குரு பகவானுக்கு நடைபெறும்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இக்கோயிலில் ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், சுவாமியானவர் ராகு கிரகத்துக்கு அதிபதியாவார்.
நட்சத்திரம் குருவுக்கு அதிபதியாகும்.
இக்கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம். மணி, கோயில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சி. பூபதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக