சிறுவத்தூர் கர்பரட்சாம்பிகை கோயிலில் நடைபெற்ற சந்தனகாப்பு அலங்காரம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள கர்பரட்சாம்பிகை உடனாகிய முல்லைவனநாதர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு
சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
முன்னதாக சிறுவத்தூர் செல்வ விநாயகர் கோயிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பாலபிஷேகம்,அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக