குடியாத்தத்தில் வேதாந்த நகர் பகுதிகளில் கால்வாய் நிரம்பி ரோட்டிற்கு மேல் தண்ணீர் வழியும் நிலை!!


வேலூர் மாவட்டம்,குடியாத்தம் 24 வது வார்டு பகுதியில் லட்சுமி கார்டன் மற்றும் வேதாந்த நகர் பகுதிகளில் கால்வாய் நிரம்பி ரோட்டிற்கு மேல் தண்ணீர் வழியும் நிலையில் உள்ளது இதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை கால்வாய் வருவதற்கு இரண்டு பேர் அனுப்புகிறார்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை எங்களுக்கு 36 தெருக்கள் உள்ளன பொதுமக்களுக்கு கழிவு நீர் தேங்குவதால் நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே ஆணையாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்