குடியாத்தம் பிச்சனூர்.பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். க. சிந்து அவர்களிடம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர்.  எஸ். ரமேஷ் பள்ளி கல்வி குழு முன்னாள் துணைத் தலைவர். கோ. ஜெய், வேலு ஆகியோர் சால்வை அணிவித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர். இளங்கோ மற்றும் தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்