தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-இல் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த காலங்களில் நண்பகலியே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், விஜய் கட்சி வாங்கும் வாக்குகளால் முடிவுகளை ஓரளவு கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.
தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக