அரக்கோணம்:குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/= கிடைக்கவும் முழு முயற்சி செய்வோம் ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் இரானிப்பேட்டை விரிவடைந்த மாவட்டசெயற்குழுக் கூட்டம் நேற்று 06.05.2026 காலை 10.30 மரையளவில் அரக்கோணம் வட்டக்கிளை ஏற்பாடுகளுடன், அரக்கோணம், டவுன் ஹாலில், மாவட்ட தலைவர் சுந்தரேசன் அவர்கள் தலைமையில் செயலாளர். ஜெயக்குமார் மற்றும்
பொருளாளர். சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் . வி என் பார்த்தீபன் அவர்கள் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், நெமிலி வட்ட கிளைத் தலைவர் சுரேந்திரநாத், செயலாளர் ராஜமாணிக்கம், வாலாஜா வட்டக்கிளைத் தலைவர் ஜெயராமன் மற்றும் செயலாளர் ராமகிருஷ்ணள், ஆற்காடு வட்ட கிளைத் தலைவர் கண்ணப்பன், செயலாளர் விநாயகம், சோளிங்கர் வட்டக்கிளை தலைவர் முருகேசன் ஆகியோருடன் அரக்கோணம் லேப்சுந்தராஜ் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
எதிர்வரும் மாநில செயற்குழுக் கூட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் நடத்த பொறுப் பேற்றுக் கொண்டுயிருக்கிறது மேலும் வருவோரின் வசதிக்கு ரயில் பயணம் எளிதாக்கும் வகையில், அரக்கோணத்தில் கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. எட்டாவது ஊதியக்குழுவின் பயன்கள் கட்டாயம் ஓய்வூதியர்களுக்கும் தவறாமல் கிடைக்க அனைத்து முயற்சிதளும் மேற்கொள்வது
விடுபட்டுள்ள எல்லா பிரிவினருக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் மாதம் ரூ.7850/= கிடைக்கவும் முயற்சி செய்வது எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இறுதியில் முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் வடிவேலு அனைவருக்கும் நன்றி கூற, கூட்டம் நிறைவடைந்து.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக