குடியாத்தத்தில் .3. புஷ்ப பல்லக்குகள் வீதி உலா!!
வேலூர்மாவட்டம்,குடியாத்தம்.கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 3 புஷ்ப பல்லக்குகள். வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
குடியாத்தம் .கெங்கையம்மன். கோவில் சிரசு. திருவிழாவை முன்னிட்டு கடந்த . மே 14 ஆம் தேதி தேர் திருவிழா 15 ஆம் தேதி அம்மன் சிரசு திருவிழா நடந்தது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நேற்று இரவு குடியாத்தம்.கொச. அண்ணாமலை தெருவில்
குடியாத்தம் நகர வட்ட அகமுடைய துளுவ வேளாளர் சங்கம் சார்பில் புஷ்ப பல்லக்கு விழா நடந்தது ..
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சீனிவாசன் செயலாளர் மணிவண்ணன் பொருளாளர் .. ஹரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாரத் மகி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே. எம். ஜி. கல்வி . நிறுவனங்களின் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் வழக்கறிஞர் . கே எம் பூபதி ஆகியோர் புஷ்ப பல்லக்கை தொடங்கி வைத்தார்.
கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கங்கை அம்மன் கோயில் அருகே புஷ்ப பல்லுக்கு குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள். சங்கம் சார்பில் கண்ணகி தெரு காளியம்மன் கோயில் அருகே புஷ்ப பல்லக்கு என்று மூன்று புஷ்ப பல்லக்குகள் மேளதாளங்கள் முழங்க இரவு தொடங்கி . அதிகாலை வரை முக்கிய வீதி வழியாக வீதி உலா நடைபெற்றது
புஷ்ப பல்லக்குகள் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தீபார்தனை செய்து அம்மனை வழிபட்டனர் புஷ்ப பல்லுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில். தரணம் பேட்டை கண்ணகி தெரு அருகே இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காவல்துறையினர் மின்சார வாரியத் துறையினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக