நத்தம் வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை -பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையில் வாரச்சந்தை கூடும். இதில் ஆடு, மாடு, கோழி, காய்கறி, பலசரக்கு அனைத்து வியாபாரமும் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வேலம்பட்டி ஊராட்சியில் அரசு திருமண்டபத்திற்கு பின்புறம் ஆட்டுச் சந்தை கூடும்.
நத்தம் பகுதியானது விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இவர்கள் விவசாயத்தோடு ஆடு, கோழி போன்ற கால் நடை வளர்த்து பராமரித்தும் வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இங்கு கூடும் ஆட்டுச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிளிருந்தும் ஆடு மற்றும் கிடாய்கள் வரத்து அதிகம் இருந்தது. இந்நிலையில் கிடாய் வாங்குவதற்காக ஆடுவியாபாரிகளுகடன் , பக்ரீத்துக்கு குர்பானி கொடுப்பதற்காக கிடாய்கள் வாங்கும் இஸ்லாமியர்கள் திண்டுக்கல், அரவக்குறிச்சி,சிங்கம்புணரி பள்ளபட்டி போன்ற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். இங்கு அதிகாலை முதலே கிடாய் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியதை தொடர்ந்து 10 மணிக்குள் கிடாய்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் மூலம் இச்சந்தையில் ஆடு மற்றும் கிடாய்கள் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையானது. இது குறித்து வேலம்பட்டியைச் சேர்ந்த நல்லியப்பன் என்ற விவசாயி கூறியதாவது:
பக்ரீத் பண்டிகைக்காகவே பிரத்யேகமாக மேச்செறி கிடாய்களை வாங்கி வளர்ப்பது வழக்கம். எவ்வித குறைபாடும் (ஒச்சம்) இன்றி வளர்த்து அதை சுமார் 1 வருட வயது பூர்த்தியாகும் நிலையில் இத்தருணத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதால் வியாபாரிகள் கிடாய் குட்டிக்கு கறி எடைக்கு வாங்கிச் செல்வதைக் காட்டிலும், குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள் குட்டிகளின் பராமரிப்பு தன்மைக் கேற்ப கூடுதலான விலை கொடுத்து வாங்கிச் செல்வதால் நல்ல லாபம் கிடைக்கும். என்பதால் குர்பானி கொடுக்கும் தன்மை இருக்கும் வகையில் கிடாய் மற்றும் ஆடுகளை வளர்ப்பதால் அதிக லாபம் பெறமுடிகிறது என்றார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக