திருமயம் அருகே பனங்குடி குருந்துடைய அய்யனார் கோயில் 25 ம்ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்!!

புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டி_ கொத்தமங்கலம் சாலையில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் முதலிடத்தை மதுரை  அவணியாபுரம், எஸ்கேஆர் ,2 ம் இடத்தை,

கூத்தாடிவயல் கருப்பையா3 ம் இடத்தை வலையவயல் அறிவுத்தேவர்,4 ம் இடத்தை கடியாபட்டி இலக்கியா ஆகிய வண்டிகள் அடைந்தன.  சிறிய மாடுகளுக்கான போட்டி இரு பிரிவாக நடத்தப்பட்டு அதில் 8 வண்டிகள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றிபெற்ற 12 மாட்டு வண்டிகளுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் கிராம மக்கள் சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கான ஏற்பாடுகளை பனங்குடி கிராமத்தினர்,இளைஞர்கள் செய்திருந்தனர். பந்தயத்தை கடியாபட்டி_ கொத்தமங்கலம் சாலையின் இருபுறமும் திரளான மக்கள் கூடிநின்று  பார்த்து மகிழ்ந்தனர். திருமயம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்