அரக்கோணத்தில் எக்ஸ்போ 2026 இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணத்தில் 5 ஆண்டு காலமாக இயங்கி வரும். ஸ்மாட் கேரியர் ப்ரோமோஷன்ஸ் தீபம் அறக்கட்டளை மற்றும் டிடிசி தொழிலாளர் பேரவை இணைந்து டவுன்ஹால் மண்டபத்தில் எக்ஸ் போ -2026 யை வரும் மே 9 ந் தேதி ஒரு நாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யபட்டு  உள்ளது இது தொடர்பாக   நிகழ்ச்சியின்  ஒருங்கினைப்பார் பி எஸ் ஜெய்குமார், மற்றும்  கலைவாணி உள்ளிட்ட  தொழில்முனைவோர் குழுவினர்கள்   டவுன் ஹால் பொது செயலாளர் மருத்துவர்  S.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர் இது தொடர்பாக ஒருங்கினைப்பார் பி எஸ் ஜெய்குமார், மற்றும்  கலைவாணி செய்தியாளர்களிடம் கூறியபோது

 மே 9ந் தேதி நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2026 ல் சிறுவர்கள் முதல் வயோதியர்கள் வரையில் பங்கேற்று பயனடையும் முகமாக 

ஆடை அலங்காரப் பொருட்கள் மெழுகு, வாசனை திரவியங்கள், கைவண்ண பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும்  கலை நிகழ்ச்சிகள் பல சிறப்புடன் ஏற்பாடு செய்யபட்டு உள்ளன. இதற்காக 30 வகையான அரங்கங்கள் கொண்ட எக்ஸ்போ 2026 கலந்து கொள்ள அனுமதி இலவசம் ஆகவே பொது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்து, தொழில் முனை வோர்க்கு ஆதரவு அளிக்கு மாறு  கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தொிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்