தேவகோட்டையில் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் 2 ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் - தென்மண்டல ஐ.ஜி உத்தரவு!!
தேவகோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 18-ம் தேதி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்பெண்ணை அலைக்கழித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி, நகர காவல் ஆய்வாளர் துரைராஜ், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஜெயா மற்றும் ராஜேஸ்வரி, தனிப்பிரிவு காவலர் சந்தானம் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர உத்தரவிட்டுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக