ஒரு மணி நேரத்தில் 10.55 கிலோமீட்டர் நிற்காமல் குவார்டு ஸ்பீடு கேடிங் செய்து சாதனை புரிந்த கோவில்பட்டியை சேர்ந்த செல்வி. குறளினி!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் திருவரங்குளம் கோவில்பட்டி வசித்து வரும் மணிவண்ணன் ஐஸ்வர்யா இவர்களின் 4.8 வயது பெண் குழந்தை குறளினி புதுக்கோட்டை கோட்டை கலைஞர் பூங்காவில் அமைந்துள்ள சேலஞ்சர்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில் கடந்த எட்டு மாதங்களாக ஸ்கேட்டிங் பயின்று வந்தார். தற்போது அவர் ஒரு மணி நேரத்தில் 10.55 கிலோமீட்டர் நிற்காமல் குவார்டு ஸ்பீடு கேடிங் செய்து சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை இந்தியன் மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் சிறுமி குறளினிக்கு மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்