"லட்சம் குறித்து புகாரளிப்பவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு" ஊடகங்கள் வெளியிட்ட போலி செய்தி!!
“தமிழ்நாட்டில் எந்தவொரு அரசுத் துறையிலும் உங்களிடம் வெறும் ரூ. 1000 லஞ்சம் கேட்கப்பட்டால் கூட, மக்கள் ஆதாரங்களுடன் தாராளமாகப் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக முறையான ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் குடிமக்களுக்கு ரூ. 1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கங்களில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பல ஊடகங்கள் இதை செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் அளித்த Toll Free நம்பர் (18004251555) என்று பரவி வரும் எண்ணானது, “காஜா பாம்” நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக