இவங்க இரண்டு பேருக்கு இடையிலதான்... தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளிலும் பிரசாரங்களிலும் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மாநிலக் கட்சிகள் களத்தில் இறங்கிவிட்ட நிலையில் தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜகவும் காங்கிரஸும் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. இன்று போய் நாளை வா கதையாக உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி இன்றைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக