அரக்கோணம் தி டவுன்ஹாலில் நீர் மோர் திட்டம்! ராமதாஸ் சார்பில் வழங்கபட்டது!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் டவுன்ஹால் அமைந்துள்ளது இந்த டவுன் ஹால் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை ஒவ்வொன்றாக சிறப்புடன் நிறைவேற்ற பட்டு வருகிறது அந்த வகையில் மூத்த சங்க உறுப்பினரும் முன்னாள் மணியக்காரருமான ராமதாஸ் பெயரில்  தாகம் தணிக்கும் நீர் மோர் வழங்கபட்டது   இத்திட்ட விழா  டவுன் ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தலைமையில்  பொதுச்செயலாளர் டாக்டர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் இந்த திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன் அடைந்தனர் இத்திட்ட ஏற்பாடுகளில் முன்னாள் சங்க நிர்வாகி ஆர்.வெங்கட்டரமணன் பொறுப்பேற்றுக் கொண்டார் இந்த திட்ட பணிகளை சமூகநல பொதுப் பாளர் முருகவேல் ஈடுபட்டார் முன்னாள் சங்க நிர்வாகிகள் சாய் பார்த்தீபன் உட்பட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு நீர் மோர் வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்