கோவை பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கை செலுத்திய ஸ்டூல் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர். சரவணன்!!

கோவை மாவட்டம்,தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், கோவை வடக்கு தொகுதியில் ஸ்டூல் சின்னத்தில், போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர். சரவணன் தனது வாக்கை செலுத்தினார். 

நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். வாக்கு சாவடியில் காத்திருந்த பொழுது மாற்று திறனாளி ஒருவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் உடனடியாக, சுயேட்சை வேட்பாளர். சரவணன் அந்த மாற்று திறனாளி பெண்ணுக்கு உதவினார். பின்னர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்