தமிழ்நாட்டை எப்படியாவது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென டெல்லி மோடி கூட்டம் எடப்பாடி பழனிச்சாமியை கைப்பாவையாக வைத்துள்ளனர்! புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை, தமிழ்நாட்டை பழி வாங்குகிற பாஜகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடக்கூடாது.
அதனால் தான் பாஜக நேரடியாக வராமல் அதிமுக என்ற முகமூடியை போட்டுக்கொண்டு வந்துள்ளது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கான அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தவர்,
மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி....
ஏற்கனவே 10 தோல்வியை அவருக்கு கொடுத்துள்ளோம், இந்த முறை மொத்த தோல்வியையும் அவருக்கு கொடுக்க வேண்டும், அவர் 11 தோல்வி என்பதை குறிக்கும் வகையில் தான் இரண்டு விரல்களை காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்....
தமிழ்நாட்டை எப்படியாவது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென டெல்லி மோடி கூட்டம் எடப்பாடி பழனிச்சாமியை கைப்பாவையாக வைத்துள்ளனர்.... புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துராஜாவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பேச்சு!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திலகர் திடலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் எம்எல்ஏவுமான மருத்துவர் முத்துராஜாவை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பரப்பரை மேற்கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்தும் கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு போடப்பட்ட மாலையை வேட்பாளர் முத்துராஜாவுக்கு உதயநிதி ஸ்டாலின் அணிவித்தார்.
இதன் பின்னர் பரப்பரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்:
எங்கு போனாலும் நல்ல வரவேற்பு உள்ளது. மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்,மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்,
5 வருடத்தில் நாங்கள் செய்துள்ள சாதனையால் தான் மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம். 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தை அதிமுக முடக்கப்பார்த்தது,
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக வழங்கட்டும், முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கபடும், 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்க உள்ளோம், இவ்வளவு திட்டங்களை செய்ததால் தான், வளர்ந்து வரக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது .
மாநில அரசுக்கு ஒன்றிய அரசு எந்த வகையிலும் துணையில் நிற்கவில்லை, கேட்கின்ற எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கின்றனர்,
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை, தமிழ்நாட்டை பழி வாங்குகிற பாஜகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடக்கூடாது ,
அதனால் தான் பாஜக நேரடியாக வராமல் அதிமுக என்ற முகமூடியை போட்டுக்கொண்டு வந்துள்ளது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கான அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தவர்,
மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி,
ஏற்கனவே 10 தோல்வியை அவருக்கு கொடுத்துள்ளோம், இந்த முறை மொத்த தோல்வியையும் அவருக்கு கொடுக்க வேண்டும், அவர் 11 தோல்வி என்பதை குறிக்கும் வகையில் தான் இரண்டு விரல்களை காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அனைத்து தரப்பினருக்குமான அரசாக திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை எப்படியாவது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென டெல்லி மோடி கூட்டம் எடப்பாடி பழனிச்சாமியை கைப்பாவையாக வைத்துள்ளனர் என்று பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக