அரக்கோணம் தி டவுன் ஹாலில் அன்னதானம் வழங்கிய மருத்துவர்கள்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனை எதிரில் டவுன் ஹால் உள்ளது இந்த | டவுன்ஹால் நிர்வாகத்தின் சார்பில் வாரம் ஒருவர் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தொடங்கினர் அந்த திட்டத்தின் கீழ் இந்த வாரம் மருத்துவர் செல்வகுமரன் பங்களிப்பில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான திட்டத்திற்கு டவுன்ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தலைமை தாங்கி பொது செயலாளர் டாக்டர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து அன்னதானம் வழங்கினார். இதில் டவுன்ஹால் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு அவர்களும் அன்னதானம் வழங்கினர இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பயனடைந்தனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை டவுன் ஹால் சமூக நலப் பொறுப்பாளர் முருகவேல் உடனிருந்து கவனித்து கொண்டார் டவுன் ஹால் மேலாளர் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக