கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர். பி. ஆர். ஜி. அருண்குமார் செங்காளிபாளையம் சுற்றுப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் !!
கோவை மாவட்டம்,கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் செங்காளிபாளையம், காந்தி காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக செங்காளிபாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வரவேற்றனர். மேலும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர். அருண்குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குறுதிகள் அனைத்தையும் இப்பகுதிக்கு கொண்டு வரவும், மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் இந்த பகுதிக்கு கொண்டு வரவும், நான் உறுதுணையாக இருப்பேன்.
வருங்கால முதல்வர் எடப்பாடியார் அறிவித்துள்ள முக்கியமான திட்டமான அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இடமில்லாமல் இருந்தால் கிராமமாக இருந்தால் இடம் வாங்கி கட்டிக் கொடுக்கப்படும். நகரமாக இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற உறுதியை கூறிக் கொள்கிறேன். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் எடப்பாடி ஏறும் உறுதியாக இருக்கிறார். அதேபோல் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மோடியும் உறுதியாக இருக்கிறார். அந்த இரண்டு கரங்களும் இணையும் போது மூல வீச்சில் தமிழகத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என திமுக சொன்னது. ஆனா அவங்க செய்யல அண்ணா திமுக சொல்லுது. கண்டிப்பா செய்யும். அதேபோல கேஸ் மானியம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு சிலிண்டருக்கு கூட மானியம் கொடுக்கவில்லை. அண்ணா திமுக ஆட்சி அமைந்தவுடன் வருடத்திற்கு மூன்று சிலிண்டர்கள் கொடுக்கப்படும். அதேபோல் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை கொடுக்கப்படும் என்றார்கள். பாதிப்பேருக்கு கொடுத்துவிட்டு பாதிப்பேருக்கு கொடுக்கவில்லை. பாரபட்சமாக வழங்கினார்கள்.
அண்ணா திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் குலவிளக்கு திட்டம் மூலம் 2000 வழங்கப்படும். திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அண்ணா திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் பிரிட்ஜ் வழங்கப்படு.ம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை சின்னம் என வாக்கு சேகரித்தார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக